top of page

SI Questions and anwers- subject Chemistry

Su


  1. பொருளின் வேதியியல் இயைபில் ஏற்படும் மாற்றம் வேதியியல் மாற்றமாகும்.

  2. இரும்பு துருப்பிடித்தல், உணவு செரித்தல், முட்டை வேக வைத்தல், வாழைப்பழம் அழுகுதல், கட்டை எரிதல் ஆகியவை வேதியியல் மாற்றங்களாகும்.

  3. மணலினையும் நீரினையும் கலத்தல், மரக்கட்டையினை வெட்டுதல், தகரம் நசுங்குதல், பல்வேறு வண்ண பட்டன்களை கலத்தல் போன்றவை இயற்பியல் மாற்றங்களாகும்.

  4. பருமன் மாறுபாடு அடைந்தும், நிறை மாறாமலும் பொருள்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு இயற்பியல் மாற்றங்கள் என்று பெயர்.

  5. ஒரு பொருளின் வேதியியல் இயைபில் எந்தவொரு மாற்றத்தையும் நிகழ்த்தாமல் அப்பொருளின் இயற்பியல் பண்புகளில் மட் டுமே ஏற்படும் மாற்றங்களுக்கு இயற்பியல் மாற்றங்கள் என்று பெயர்.

  6. இயற்பியல் மாற்றத்தில் புதிய பொருள் எதுவும் உண்டாவதில்லை.

  7. பளபளப்பு, தகடாகும் தன்மை (நெகிழ்வுத்தன்மை ) மற்றும் மெல்லிய கம்பிகளாக இழுக்கக்கூடிய பண்பு, (நீளுமை ) அடர்த்தி, பாகுத்தன்மை , கரைதிறன், நிறை , பருமன் போன்றவை இயற்பியல் பண்புகளுள் சில.

  8. திண்மத் திலிருந்து திரவத்திற்கு மாறுவது உருகுதல் என அழைக்கப்படுகிறது.

  9. திரவத் திலிருந்து வாயுவிற்கு மாறுவது ஆவியாதல் என அழைக்கப்படுகிறது.

  10. திரவத் திலிருந்து திண்மத் திற்கு மாறுவது உறைதல் என அழைக்கப்படுகிறது.

  11. வாயுவிலிருந்து திரவத் திற்கு மாறுவது ஆவி சுருங்குதல் என அழைக்கப்படுகிறது.

  12. திண்மத் திலிருந்து வாயுவிற்கு மாறுவது பதங்கமாதல் என அழைக்கப்படுகிறது.

  13. ஆவியாதல் ஒரு மெதுவாக நடைபெறும் நிகழ்வு; மேலும் அது திரவத்தின் புறப்பரப்பில் மட்டுமே நிகழ்வதாகும்

  14. தூய நீரின் கொதிநிலை என்ன? 100o c

  15. உறைதல் என்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

  16. உருகுதல் என்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

  17. ஆவியாதல் என்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

  18. ஆவி சுருங்குதல் என்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

  19. பதங்கமத்தால் என்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

  20. படிகமாக்குதல் என்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

  21. நறுக்கிய ஆப்பிள், தோல் நீக்கி காற்றில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு, மற்றும் வெட்டி வைக்கப்பட்ட கத்திரிக்காய் போன்றவற்றின் நிறம் மங்கும் நிகழ்வு ஒரு வேதி மாற்றமாகும்.

  22. இரும்பு துருப்பிடித்தல் ஒரு வேதி மாற்றமாகும்.

  23. இரும்பு துருபிடித்தலுக்கு தேவையான பொருட்கள் எவை எவை? ஆக்ஸிஜன், நீர்

  24. இரும்பு துரு பிடித்தலின் வேதி வாய்ப்பாடு என்ன? Fe + 3O2 + 2H2O → 2Fe2O3. H2O

  25. எரிதல் ஒரு வேதி மாற்றமாகும்.

  26. இரும்பின் மீது குரோமியம் அல்ல துதுத்தநாகம் போன்ற உலோகங்களை ஒரு படலமாகப் பூசுவதும் துருப்பிடித்தலைத் தடுக்கும் ஒரு மாற்று முறையாகும். இம்முறைக்கு நாக முலாம் பூசுதல் என்று பெ யர்.

  27. காற்றில் மெக்னீசியம் நாடா எரியும் ஒரு வேதி மாற்றமாகும்

  28. பால் தயிராதல் ஒரு வேதியியல் மாற்றமாகும்.

  29. பால் தயிராதல் ஒரு மீளா வினையாகும்.

  30. இட்லி மாவு தயாரித்தல் ஒரு வேதியியல் மாற்றமாகும், ஒரு மீளா வினையாகும்.

  31. ஈஸ்ட் மற்றும் சிலவகை பாக்டீரியாக்களினால் சாக்கரைக் கரைசலினை ஆல்க ஹாலாகவும், கார்பன் டை ஆக்ஸைடாகவும் மாறும் நிகழ்விற்கு நொதித்தல் என்று பெயர்.

  32. நொதித்தல் ஒரு வேதியியல் மாற்றமாகும்.

  33. நொதித்தல் என்ற நிகழ்வினை முதன்முதலில் விவரித்தவர் யார்? லூயிஸ் பாஸ்டியர் (1822 – 1895)என்ற பிரெஞ்சு வேதியாலர் ஒரு நுண்ணுயிரியலாளரும் ஆவார்.

  34. ரேபிஸ் என்ற வெறிநாய்கடிக்கும் மருத்துவம் கண்டறிந்தவர் யார்? லூயிஸ்பாஸ்டியர்.

  35. சமையல் சோடாவும் எலுமிச்சை சாறும் இணையும் வினையை வேதிச்சமன்பாட்டை எழுதுக? சோடியம் பை கார்பனேட் + சிட்ரிக் அமிலம் → சோடியம் சிட்ரேட் + கார்பன் டை ஆக் ஸைடு + நீர்.

  36. சமையல் சோடாவின் வேதிப்பெயர் என்ன ? சோடியம் பை கார்பனேட்.

  37. எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம் எது? சிட்ரிக் அமிலம்.

  38. எந்த ஒரு பொருள் ஒரு வேதிவினையில் எந்த மாற்றத் திற்கும் உட்படாமல், வேதி மாற்றத்தின் வேகத்தினை மட் டும் துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு வினையூக்கி என்று பெயர்.

  39. சர்க்கரையின் நொதித்திலில் ஈஸ்ட்டில் உள்ள நொதிகள் வினையூக்கியாக செயல்படுகிறது.

  40. சுட்ட சுண்ணாம்பின் வேதிப்பெயர் என்ன ? கால்சியம் ஆக்ஸைடு.

  41. தெளிந்த சுண்ணாம்பின் வேதிப்பெயர் என்ன ? ஹைட்ராக்ஸைடு.

  42. சுட்ட சுண்ணாம்புடன் நீரினைச் சேர்க்கும் பொழுது அதிகளவு வெப்பம் வெளியேறி தெளிந்த சுண்ணாம்பு கிடைக்கிறது.

  43. சுட்ட சுண்ணாம்புடன் நீரினைச் சேர்க்கும் பொழுது ஏற்படும் மாற்றம் என்ன? வேதியியல் மாற்றம்.

  44. மெக்னீசியம் நாடா எரிவது, மரம் எரிதல் போன்ற நிகழ்வின் பொழுது வெப்பம் வெளியிடப்படுகிறது எனவே இவ்வகை மாற்றங்கள் வெப்ப உமிழ் மாற்றங்கள் என அழைக்கப்படுகிறது.

  45. நீர் வெப்பத்தை உறிஞ்சி நீராவியாகிறது அதேபோல் பனிக்கட்டி வெப்பத்தை ஏற்று, உருகி நீராகிறது. இம்மாதிரி வெப்பத்தை உறிஞ்சும் மாற்றங்கள் வெப்ப ஏற்பு மாற்றங்கள் என்றழைக்கப்படும்.

  46. குளுக் கோசுடன் நீர் சேர்க்கும் பொழுது வெப்பக்கொள் மற்றம் நிகழ்கிறது?

  47. சோப்புத் தூளுடன் நீரினைச் சே ர்க்கும் பொழுது வெப்ப உமிழ் மாற்றம் நிகழ்கிறது?

  48. பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுதல், இதயத்துடிப்பு, மணிக் கொரு முறை கடிகாரம் அடிக்கும் நிகழ்வு, கடிகாரத்தின்நொடி – முள் / நிமிட – முள் / மணி – முள்ளின் ஓட்டம், இயற்கை யில் பருவகால மாற்றங்கள் ஆகியன கால – ஒழுங்கு மாற்றங்களாகும்.

  49. எரிமலை வெடித்தல், நிலந டுக்க ம் ஏற்படுதல், இடியுடன் கூடியமழை பொழிவின் பொழுது தோன்றும் மின்னல், கிரிக்கெட்டில் இரு புறமும் உள்ள ஸ்டம்புகளின் இடைப்பட்ட தொலைவில் ஓடும் ஆட்டக்காரரின் ஓட்டம், நடனம் ஆடுபவருடைய கால்களின் இயக்கம் ஆகிய நிகழ்வுகள் கால – ஒழுங்கற்ற மாற்றங்களாகும்.

Comments


  • Twitter
  • Facebook

8825451519

©2022 SHIVA IAS ACADEMY SALEM. All rights reserved

bottom of page